விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு மேட்டர்… மோடி போட்ட தேர்தல் வியூகம் – திமுகவின் பதில் என்ன?

Katchatheevu Issue BJP vs Congress – DMK: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த விவகாரம் தற்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜகவினர் தங்களின் பிரச்சாரங்களில் கடந்த சில நாள்களாகவே கச்சத்தீவு பிரச்னையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக எழுப்பி வந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக பாஜக தொடர்ந்து இதுகுறித்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி இன்று காலை கச்சத்தீவு குறித்து அவரது X தளத்தில் போட்ட பதிவு தற்போது தேர்தல் களத்தில் சற்று பரபரப்பை உண்டாகி உள்ளது.

பிரதமர் மோடி (PM Modi) அவரது தளத்தில் ஒரு பதிவில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தொடர்பான தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை பகிர்ந்திருந்தார்.

பிரதமர் போட்ட ட்வீட்

மேலும், அந்த பதிவில்,”இது உண்மையை விளக்குகிறது மற்றும் அதிர்ச்சியை தருகிறது. கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அத்துமீறி கொடுத்தது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது மற்றும் மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால பணியாகும்” என கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

பாஜகவினரின் குற்றச்சாட்டு

தொடர்ந்து, தமிழ்நாட்டில் திமுக மீதும் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக குற்றம் சுமத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (L Murugan) அவரது X பதிவில்,”காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இலங்கைக்கு கச்சத்தீவை, அக்கட்சி சொந்த நலனுக்காக தாரை வார்த்தது, மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் புதிய ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *