அதென்ன முதலிரவு… முதல் பகல்னு இருக்கக் கூடாதா..? – காமத்துக்கு மரியாதை

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார் “அதென்ன மொத ராத்திரி… மொத பகல்னு இருக்கக்கூடாதா…’ என்று. இதே கேள்வியை சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.

”உலகம் முழுக்க இரவுதான் உறவுக்கான நேரமாக இருந்து வருகிறது. அதனால்தான், நம் கலாசாரத்தில் முதலுறவு நாளை முதலிரவு என்று குறிப்பிடுகிறார்கள். மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் பகலெல்லாம் வேட்டையாடிவிட்டு, ஓய்ந்திருக்கும் இரவு வேளைகளில் உறவுகொள்ள ஆரம்பித்தார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பு உருவான பிறகு, தாங்கள் உறவுகொள்வது மற்றவர்கள் கண்களில் படக்கூடாது என்பதற்காக இரவையே உறவுக்கான நேரமாகத் தொடர்ந்தார்கள். இதுவே பின்னாளில், `அய்யோ, யாராவது பார்த்துட்டா’ என்று இரவையே தாம்பத்திய உறவுக்கான நேரமாகத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாகிவிட்டது.

அடுத்து அரசர்கள் காலம். நாகரிகம், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாசாரமெல்லாம் உருவாகிவிட்டது. ஆனால், அரண்மனையே என்றாலும் அறைகளுக்கு கதவில்லை. திரைச்சீலைகள் மட்டும்தான். அரசனும் அரசியும் இணைந்திருக்கும் நேரத்தில், அவர்களின் அறையில் தொங்கவிடப்பட்டிருந்த பங்கா (விசிறி)வை பக்கத்து அறையிலிருந்து பணிப்பெண்கள் இயக்கிக் கொண்டிருப்பார்கள். அப்போதும் இரவுதான் உறவுக்கு அந்தரங்கமான நேரமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *